காஷ்மீர்: பள்ளிக்கு நெற்றியில் திலகம் அணிந்து வந்ததால் மாணவிகளை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்
காஷ்மீரில் நெற்றியில் திலகம் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவிகளை ஆரிசியர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படித்துவரும் இந்து மதத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவிகள் இருவர் கடந்த 4-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
அந்த மாணவிகள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் நெற்றியில் திலகம் அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளனர். மாணவிகளின் வீடுகளில் இந்து மத பண்டிகையான நவராத்திரி கொண்டாடப்பட்டதால் அந்த மாணவிகளின் தங்கள் நெற்றியில் திலகம் அணிந்து பள்ளிக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், நெற்றியில் திலகம் அணிந்து பள்ளிக்கு வந்த அந்த இரு மாணவிகளை அந்த பள்ளியில் பணிபுரியும் வகுப்பு ஆசிரியரான நசீர் அகமது கடுமையாக தாக்கியுள்ளார்.
வகுப்பறையில் வைத்து அந்த இரு மாணவிகளையும் கடுமையாக தாக்கி, கொச்சை சொற்களை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. திலகம் அணிந்து சென்றதற்காக தங்கள் மகள்களை பள்ளி வகுப்பு ஆசிரியர் நசீர் அகமது தாக்கியதாக மாணவிகளின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.
மாணவிகள் தாக்கப்பட்டது குறித்து பெற்றோர் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து ஆசிரியர் நசீர் அகமதுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாணவிகளை தாக்கிய நசீர் அகமது மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவரத்திரி பண்டிகையையொட்டி இந்து மதத்தை சேர்ந்த மாணவிகள் நெற்றியில் திலகம் அணிந்து சென்ற நிலையில் மாணவிகளை அரசு பள்ளி ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story