டெல்லியில் இன்று முதல் அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்ப அலை தீவிரமடைய வாய்ப்பு..!
டெல்லியில் இன்று முதல் அடுத்த 4-5 நாட்களுக்கு வெப்ப அலை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் இன்று முதல் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை எட்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 19.4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளது.
நேற்று அதிகபட்ச வெப்பநிலை 39.3 டிகிரி செல்சியஸ் இருந்தது. இது வழக்கத்தை விட ஐந்து டிகிரி அதிகமாகும். சமவெளிகளுக்கு, அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும் போது அல்லது வழக்கத்தை விட 4, 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் போது "வெப்ப அலை" அறிவிக்கப்படுகிறது.
அடுத்த 4-5 நாட்களுக்கு டெல்லியில் வெப்ப அலை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8:30 மணிக்கு டெல்லியில் ஈரப்பதம் 39 சதவீதமாக இருந்தது. மேலும் டெல்லியின் காற்றின் தரம் 'மோசமான' பிரிவில் காற்றின் தர குறியீடு 271 என்ற அளவோடு உள்ளது.
Related Tags :
Next Story