தமிழ் வேத மந்திரங்கள் கூறி திருமணம் - பட்டதாரி தம்பதிகள் அசத்தல்....!
காரைக்காலில் தமிழ் வேத மந்திரங்கள் கூறி பட்டதாரி மணமக்கள் திருமணம் செய்து உள்ளனர்.
காரைக்கால்,
புதுச்சோரி மாநிலம் காரைக்காலில் பட்டதாரி தம்பதியர்கள், தமிழ் வேத மந்திரங்கள் கூறி திருமணம் செய்து அசத்தி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்-லட்சுமி தம்பதிகளின் மகன் கவியரசன். அதேபோன்று காரைக்கால் கிளிஞ்சல்மேடு செல்வராஜ்-விஜயலட்சுமி தம்பதிகளின் மகள் கிருத்திகா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு காரைக்கால் காமராஜ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.
இதில் பட்டதாரி மணமக்கள் கவியரசன் -கிருத்திகா தமிழ் வேத மந்திரங்கள் கூறி திருமணம் செய்து கொண்டனர். அப்போது தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.
தமிழ் வேத மந்திரங்கள் கூறி திருமணம் செய்து கொண்ட பட்டதாரி தம்பதிகள் கவியரசன் -கிருத்திகா ஆகிய இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story