ராஜஸ்தான்: கரவ்லி கலவரம் - 2 மணி நேரம் ஊரடங்கில் தளர்வு; இணைய சேவை தொடர்ந்து நிறுத்தம்


ராஜஸ்தான்: கரவ்லி கலவரம் - 2 மணி நேரம் ஊரடங்கில் தளர்வு; இணைய சேவை தொடர்ந்து நிறுத்தம்
x
தினத்தந்தி 7 April 2022 4:27 PM IST (Updated: 7 April 2022 4:27 PM IST)
t-max-icont-min-icon

வன்முறையால் பாதிக்கப்பட்ட கரவ்லியில் ஊரடங்கு உத்தரவு 2 மணி நேரம் தளர்த்தப்பட்டது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான்  மாநிலம் கரவ்லி மாவட்டத்தில், கடந்த சனிக்கிழமையன்று மாலை  கடைகள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்தது. 

உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களை ஒட்டி கரவ்லி மாவட்டம் அமைந்துள்ளது.இந்து நாட்காட்டியின் கீழ் புத்தாண்டின் முதல் நாளான  ‘நவ் சம்வத்சர்’ கொண்டாடும் விதமாக கரவ்லி நகரில், முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதி வழியாக மோட்டார் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. அப்போது பேரணியின் மீது கல் வீசப்பட்டது. 

இதைத் தொடர்ந்து அங்கு பெரும் மத கலவரம் வெடித்தது.  இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டது. இந்த மத கலவரம் காரணமாக, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றம் நீடிக்கிறது. 

அதில் சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் போது, இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் காயம் அடைந்தனர். கரவ்லிக்கு 600 போலீசார் கொண்ட கூடுதல் படை அனுப்பப்பட்டது. பெரும்பாலான கடைகளில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையே,  வதந்திகள் எதுவும் பரவாமல் இருப்பதற்காக, கரவ்லி மாவட்டத்தில் ஏப்ரல் 4ம் தேதி நள்ளிரவு வரை இணையதள சேவையை நிறுத்தி வைக்கவும், அடுத்த உத்தரவு வரும் வரை இணையதளத்தை தடை செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் ஊரடங்கு இன்று வரை அமல்படுத்தப்பட்டது. இணையதள சேவைகளுக்கும் தடை தொடர்கிறது.

இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட கரவ்லியில் ஊரடங்கு உத்தரவு 2 மணி நேரம் தளர்த்தப்பட்டது. இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை 2 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், இணையதள சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.

கள நிலவரத்தை கண்காணிக்க பல்வேறு அதிகாரிகள் கொண்ட குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் அமைதியான உணர்வு உள்ளது என்று கரவ்லி துணை கமிஷனர் ராஜேந்திர ஷெகாவத் தெரிவித்தார்.

இந்த மோதலில் குறைந்தது 36 பேர் காயமடைந்தனர். அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 46 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story