கோவா விரைவில் முகக்கவசம் இல்லாத மாநிலமாக மாறும் - பிரமோத் சாவந்த்
கோவா விரைவில் முகக்கவசம் இல்லாத மாநிலமாக மாறும் என அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்
பனாஜி,
கொரோனா போிடர் தொடங்கியதில் இருந்து மக்கள் முககவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகிறார்கள்.
சமீப நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் டெல்லி, மராட்டியம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் முககவசம் அணிவது கட்டயமில்லை என்ற உத்தரவுகள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கோவா மாநிலத்திலும் முககவசம் அணிவது கட்டாயமில்லை என்ற உத்தரவு வெளியாக உள்ளது. இதுகுறித்து கோவா மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த், நிருபர்களிடம் கூறுகையில், “கோவா மாநிலம் விரைவில் முக கவசம் அணிய அவசியமற்ற மாநிலமாக மாறும்” என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story