2 தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு ஆய்வுத்தகவல்


2 தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு ஆய்வுத்தகவல்
x
தினத்தந்தி 8 April 2022 8:22 AM IST (Updated: 8 April 2022 8:22 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசிகள் செலுத்திய நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவர் ‘பிரேக்த்ரூ கேஸ்’ என அழைக்கப்படுகிறார்.

புதுடெல்லி, 

தடுப்பூசிகள் செலுத்திய நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவர் ‘பிரேக்த்ரூ கேஸ்’ என அழைக்கப்படுகிறார்.

நமது நாட்டின் தடுப்பூசி திட்டத்தில் உள்ள கோவேக்சின் தடுப்பூசிகளை 2 டோஸ்கள் செலுத்திய பின்னரும், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களை வைத்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) ஒரு ஆய்வு நடத்தி உள்ளது.

இப்படிப்பட்டவர்கள் உடலில் பீட்டா, டெல்டா, ஒமைக்ரான் ஆகிய உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்கிறபோது, அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, ஆனாலும், கோவேக்சின் 2 தடுப்பூசிகள் போட்டு கொரோனா தாக்கி, அதனால் ஏற்படுகிற நோய் எதிர்ப்பு சக்தியை விட இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக ஏற்படுகிறது.

இந்த ஆய்வு முக்கியத்துவம் பற்றி புனே தேசிய வைரலாஜி நிறுவனத்தின் (என்.ஐ.வி.) மூத்த விஞ்ஞானி டாக்டர் பிரக்யா யாதவ் கூறும்போது, “கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் அல்லது முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடுவதின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இது நோய்க்கு எதிரான மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது” என தெரிவித்தார்.

Next Story