இ-சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியம் - டெல்லி அரசு அறிவிப்பு
இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இ-சைக்கிள் வாங்கும் முதல் 1000 பேருக்கு 7500 மானியம் மற்றும் முதல் 10,000 பேருக்கு தலா ரூ.5,500 மானியமாக வழங்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை மந்திரி கைலாஷ் கெஹ்லோட் தெரிவித்துள்ளார்.
பயணிகள் இ-சைக்கிள்களை வாங்கும் முதல் 1,000 பேருக்கும் ரூ.2,000 கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் கைலாஷ் கெஹ்லோட் கூறியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,டெல்லியில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த மானியத் திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள் என்றார்.
Related Tags :
Next Story