பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது - ரிசர்வ் வங்கி கவர்னர்
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும். குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆகவே தொடரும்
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றமிருக்காது. வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.35% லிருந்து 3.75% ஆக உயர்த்தப்படுகிறது.
பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனாவால் பொருளாதாரம் உயர்ந்தாலும் ஐரோப்பாவின் மோதல்கள் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது.
வெளித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் சரி சமமான மட்டத்தில் உள்ளது என்றார்.
Related Tags :
Next Story