பெண்களுக்கு எதிராக பகிரங்கமாக பலாத்கார மிரட்டல் சாமியாரின் சர்ச்சை பேச்சு


பெண்களுக்கு எதிராக பகிரங்கமாக பலாத்கார மிரட்டல் சாமியாரின் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 8 April 2022 12:16 PM IST (Updated: 8 April 2022 12:16 PM IST)
t-max-icont-min-icon

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக பகிரங்கமாக பலாத்கார மிரட்டல் விடுத்து உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


லக்னோ: 

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கைராபாத் என்ற நகரில் ஒரு மசூதிக்கு வெளியே ஒரு கூட்டத்தில் சாமியார் ஒருவர் உரையாற்றினார். அப்போது  முஸ்லிம் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதாக மிரட்டியதாகக் கூறப்பட்டது. இது குறித்த  வீடியோ வெளியாகி வைரலானது . இது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெறுப்பூட்டும் பேச்சு அடங்கிய இரண்டு நிமிட வீடியோ ஏப்ரல் 2 அன்று மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் என அடையாளம் என்ற  நபர் ஊர்வலமாகச் சென்றபோது பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வீடியோவில் காவி உடை அணிந்த ஒரு நபர் ஜீப்பிற்குள் இருந்து கூட்டத்தில் உரையாற்றுவதை வீடியோ காட்டுகிறது. போலீஸ் சீருடையில் ஒருவரை பின்னணியில் காணலாம்.மைக்ரோபோனில் பேசும் போது , அந்த நபர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கூச்சலிட்டு அவரை உற்சாகப்படுத்தியபோது, வகுப்புவாத மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களைச் அவர் பேசுகிறார்.அந்த நபர் தன்னைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டுகிறார், இதற்காக ரூ.28 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

வீடியோவைப் பகிர்ந்த, உண்மைச் சரிபார்ப்பு வலைதளமான ஆல்ட்நியூசின் இணை நிறுவனர் முகமது ஜுபைர், வீடியோ ஏப்ரல் 2 அன்று எடுக்கப்பட்டது, ஆனால் ஐந்து நாட்களுக்குப் பிறகும் காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி உள்ளார்.

அவரது டுவீட்டுக்கு பதிலளித்த சீதாப்பூர் போலீஸ்  மூத்த அதிகாரி இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகவும், உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

ஜுபைரின் வீடியோ பதிவைத் தொடர்ந்து, பல டுவிட்டர் பயனர்கள் மதத் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் கடுமையான தலையீடு கோரி ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திடம் பயனர்கள் முறையிட கோரிக்கைவைத்து உள்ளனர்.



Next Story