பெங்களூரில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


பெங்களூரில் 7  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 8 April 2022 3:00 PM IST (Updated: 8 April 2022 3:00 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து போலீசாருக்கு கடிதம் வந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு போலீஸ் கமிஷ்னர் கமல் பந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு  மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.  தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தினோம். இதுவரை நடந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை. 

இந்த மிரட்டல் புரளியாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story