தேனிலவில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி...! கணவரின் இன்னொரு முகம்...!


தேனிலவில் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி...! கணவரின் இன்னொரு முகம்...!
x
தினத்தந்தி 8 April 2022 3:43 PM IST (Updated: 8 April 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

திருமணத்துக்குப் பிறகு இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்த போது தேனிலவுக்கு தனது நண்பர்களும் வருவார்கள் என்று நிதின் தெரிவித்தார்.

மும்பை

திருமணத்துக்குப் பிறகு இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்த போது தேனிலவுக்கு தனது நண்பர்களும் வருவார்கள் என்று நிதின் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அனுஷ்யா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால்...

மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்தவர் அனுசுயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நிதின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 

ஆரம்பத்தில் நிதின் தந்தை, அனுசுயாவை தனது மகனுக்கு பெண் கேட்டு வந்த போது நிதினுக்கு தன்னைவிட சம்பளம் குறைவாக இருப்பதாக கருதி மாப்பிள்ளை வேண்டாம் என்று அனுசுயா தெரிவித்தார். ஆனால் நிதின் தனக்கு ஆண்டுக்கு 14 லட்சத்துக்கு வேலை கிடைத்திருப்பதாக கூறி கடிதத்தை காட்டினார். அதனை நம்பி திருமணத்துக்கு சம்மதித்தார் .

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்துக்குப் பிறகு இருவரும் தேனிலவு செல்ல முடிவு செய்த போது தேனிலவுக்கு தனது நண்பர்களும் வருவார்கள் என்று நிதின் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அனுசுயா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர்களும் வந்தால் ஜாலியாக இருக்கும் என்று கூறி சமாதானப்படுத்தி சம்மதிக்க வைத்தார். தேனிலவின் போது இருவருக்கும் இடையே எந்த வித தாம்பத்திய உறவும் நடைபெறவில்லை. மாறாக படுக்கையறையில் நிதின் தனது மொபைல் போனை கையில் வைத்துக்கொண்டு சுயஇன்பம் அனுபவிப்பதை அனுசுயா பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மறு நாள் நிதின் போனில் அனுசுயாவின் தந்தை போன் செய்தார். போன் பேசிவிட்டு அதனை சோதித்த போது அதில் ஓரின சேர்க்கையாளர் மொபைல் ஆப் அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டு இருந்தது. அதோடு மொபைலில் ஓரின சேர்க்கை தொடர்பான சாட்டிங், வீடியோ போன்றவையும் அதிக அளவில் இருந்தது. அதோடு நிதின் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் தெரிய வந்தது. இதனை மறைத்து அனுசுயாவை திருமணம் செய்து கொண்டிருந்தார். 

இது குறித்து நிதினிடம் கேட்டதற்கு கத்தியை காட்டி மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அனுசுயா இது குறித்து தனது சகோதரியிடம் தெரிவித்தார். அவர் இது பற்றி போலீசில் புகார் செய்யும் படி கேட்டுக்கொண்டார். எனவே போதிய ஆதாரங்களை திரட்டுவதற்காக தொடர்ந்து நிதினுடன் தங்கி இருந்து அவரின் போனை சைபர் பிரிவில் கொடுத்து அனைத்து தகவல்களையும் அனுசுயா சேகரித்தார். இதைதொடர்ந்து அனுசுயா ஆதாரங்களுடன் போலீசில் புகார் செய்தார்.

அனுஷ்யா போலீசில் புகார் செய்திருப்பதை தெரிந்து கொண்டு உடனே நிதின் தானே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. ஓரின சேர்க்கையாளர் என்பதை மறைத்து திருமணம் செய்து கொண்டது தவறு என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதால் நிதின் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story