வரும் 24ஆம் தேதி புதுச்சேரி வருகிறார் உள்துறை மந்திரி அமித்ஷா..!!
புதுச்சேரிக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வரும் 24ஆம் தேதி வருகை தர உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்தார்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா புதுச்சேரி வரவிருப்பதாக அம்மாநில துணைநிலை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ஏப்ரல் 24 ஆம் தேதி புதுச்சேரியில் நடக்கவிருக்கும் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story