இன்ஸ்டாகிராம் மிரட்டலுக்கு பயந்து மாணவி தற்கொலை..!
இன்ஸ்டாகிராம் மிரட்டலுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் சிகாரிபுரா அருகே உள்ள தோகர்சி கிராமத்தை சேர்ந்த 21 வயது மாணவி பி.ஏ. படித்து வருகிறார். புதிதாக ஆண்ட்ராய்டு போன் வாங்கியிருந்த நிலையில் கடந்த 6ம் தேதி இவரது செல்போன் எண்ணை கண்டுபிடித்து இளைஞர் ஒருவர் பேசியுள்ளார்.
அப்போது மாணவியிடம் பேசிய அவர் அரைகுறை ஆடையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். அப்படி அனுப்பாவிட்டால் உன் முகத்தை ஆபாச படமாக எடிட் செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு பயந்து போன மாணவி தனது தந்தையிடம் இது குறித்து கூறியுள்ளார். இதை கேட்ட தந்தை இன்ஸ்டாகிராமில் பயமுறுத்திய இளைஞருக்கு தக்க பாடம் கற்பிக்கலாம், என்று தைரியம் கூறியுள்ளார். பின் நான் வெளியே சென்று வருகிறேன் நீ உடைமாற்றிக்கொண்டு ரெடியாயிரு போலீசுக்குப் போகலாம் என்று கூறிவிட்டு தந்தை சென்றுள்ளார். இந்நிலையில் தந்தை வீட்டிற்கு வருவதற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகளின் தற்கொலைக்கு காரணமான இளைஞருக்கு சட்டரீதியான கடுமையான தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான இளைஞரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story