கேரளாவில் நடைபெறும் மாநில சுயாட்சி மாநாட்டில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கேரளாவில் நடைபெற்று வரும் மாநில சுயாட்சி மாநாட்டில் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
திருவனந்தபுரம்,
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது மாநில மாநாடு, கேரளாவின் கண்ணூரில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து கண்ணூர் நகருக்கு புறப்பட்டுச்சென்றார்.
கண்ணூர் சென்ற முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கண்ணூரில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர் கேவி தாமஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
Related Tags :
Next Story