அனைத்து சர்வதேச பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் - சபாநாயகர் ஓம் பிர்லா
சர்வதேச பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே இந்தியா விரும்புவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
திஸ்பூர்,
அசாம் மாநிலம் கவுஹாத்தி நகரில் காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் மத்திய ஆண்டு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;-
“நம் இந்திய கலாச்சார நெறிமுறைகள் உலகை ஒரு உலகளாவிய குடும்பமாக பார்க்கின்றன. அனைத்து சர்வதேச பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியரகள் நம்புகிறார்கள். வளர்ச்சிக்கு அமைதியும் ஸ்திரத்தன்மையும் தேவை. எனவே, நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க மற்ற நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இந்தியா உலகின் மிகப்பெரிய உழைக்கும் ஜனநாயகம். கிராம அளவிலான அமைப்புகள் முதல் பாராளுமன்றம் வரை அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயக செயல்முறையில் ஈடுபட்டுள்ளோம்.
காமன்வெல்த் பாராளுமன்ற சங்க கூட்டத்தில் நல்ல நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு செல்வது மற்றும் ஜனநாயக மரபுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று நம்புகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story