தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்திடம் வாக்குமூலம் பதிவு


தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கில் சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்திடம் வாக்குமூலம் பதிவு
x
தினத்தந்தி 10 April 2022 2:10 AM IST (Updated: 10 April 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

தொலைபேசி ஒட்டுகேட்பு வழக்கு

2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாக கூறப்பட்டது.

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவுடன் கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா கட்சி காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. இதில் சிவசேனா சார்பில் அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் முக்கிய பங்கு வகித்தார். இ்ந்த நிலையின் தனது போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக அவரும் தெரிவித்து இருந்தார்.

சட்டவிரோதமாக தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதோடு, அரசின் ரகசியத்தை கசிய விட்டதாகவும் அப்போது உளவுப்பிரிவு தலைவராக இருந்த ஐ.பி.எஸ். பெண் அதிகாரி ராஷ்மி சுக்லா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வாக்குமூலம் பதிவு

இந்த நிலையில் சஞ்சய் ராவத்தை வழக்கில் சாட்சியாக போலீசார் சேர்த்து உள்ளனர். எனவே அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நேற்று கொலபா போலீசார் சிவசேனா கட்சியின் பத்திரிகை அலுவலகமான சாம்னா சென்றனர். அங்கு இருந்த சஞ்சய் ராவத்திடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்தனர்.

ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஏக்நாத் கட்சேயிடமும் சாட்சி என்ற அடிப்படையில் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story