ராம நவமி; நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து


ராம நவமி; நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
x
தினத்தந்தி 10 April 2022 2:39 AM IST (Updated: 10 April 2022 2:39 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் இன்றைய தினம் ராம நவமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தசரத மன்னரின் மகனாக ஸ்ரீராமர் பிறந்த தினம் ராம நவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;-

“ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தவும் ஒரு நல்ல சந்தர்ப்பம் ஆகும். 

நல்லொழுக்கம், சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த விழுமியங்களைப் பின்பற்ற அவரது வாழ்க்கை நம்மைத் தூண்டுகிறது. ராமர் காட்டிய வழியைப் பின்பற்றி,  சிறந்த தேசத்தைக் கட்டமைக்க உறுதி ஏற்போம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story