மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி 3-வது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறும் மா.கம்யூ.கட்சியின் 23-வது அகில இந்திய மாநாட்டில் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த பெ.சண்முகம், கருமலையான் ஆகியோர் மத்திய கமிட்டியின் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
69 வயதான சீதாராம் யெச்சூரி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story