27 கோவில்களை இடித்து எழுப்பப்பட்டது குதூப் மினார்; விஷ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டு
டெல்லியில் இந்து, ஜைன மத 27 கோவில்களை இடித்து எழுப்பப்பட்டது குதூப் மினார் என்று விஷ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் புகழ் பெற்ற குதூப் மினார் கோபுரம் பல நூற்றாண்டுகளை கடந்தது. டெல்லியில் இந்து மதத்தின் கடைசி ஆட்சியாளரின் வீழ்ச்சிக்கு பின்பு, முஸ்லிம்களின் ஆட்சியை கொண்டாடும் வகையில் கடந்த 1193ம் ஆண்டில் டெல்லி சுல்தான் குத்புதீன் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது.
73 மீட்டர் உயரத்துடன், 5 அடுக்குகளை கொண்டு இந்தியாவின் மிக உயரிய கோபுரம் என்ற பெருமையும் பெற்றது. செங்கற்களால் கட்டப்பட்ட உலகின் மிக பெரிய கோபுரமும் ஆகும்.
இந்த கோபுரம், 27 கோவில்களை இடித்து எழுப்பப்பட்டது என விஷ்வ இந்து பரிஷத் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளரான வினோத் பன்சால் கூறும்போது, குதூப் மினார் உண்மையில் விஷ்ணு ஸ்தம்பம்.
இந்து மற்றும் ஜைன மதத்தின் 27 கோவில்களை இடித்து தள்ளிவிட்டு இந்த கோபுரம் கட்டப்பட்டது. இந்து சமூகத்தினரை கேலி செய்வதற்காகவும், சீண்டுவதற்காகவும் இந்த மிக பெரிய கட்டமைப்பு எழுப்பப்பட்டு உள்ளது.
அந்த பகுதியில் கடந்த காலத்தில் அழிக்கப்பட்ட 27 கோவில்களும் மீண்டும் கட்டப்பட வேண்டும். அவற்றில் இந்துக்கள் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story