வடகிழக்கு மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க அசாமில் எதிர்ப்பு
அசாம் உள்ளிட்ட 8 வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிகளில் 10-ம் வகுப்புவரை, இந்தியை கட்டாய பாடமாக கற்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கவுகாத்தி,
அசாம் உள்ளிட்ட 8 வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிகளில் 10-ம் வகுப்புவரை, இந்தியை கட்டாய பாடமாக கற்பிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு 8 மாநிலங்களும் சம்மதித்து விட்டதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் கூறினார். இதற்கு அசாம் சாகித்ய சபா என்ற செல்வாக்கான இலக்கிய அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் பொதுச்செயலாளர் ஜாதவ் சந்திர சர்மா கூறியிருப்பதாவது:- இந்தியை கட்டாய பாடமாக்கினால், உள்ளூர் மொழிகளின் எதிர்காலமும், இணைப்பு மொழியாக உள்ள அசாமியின் எதிர்காலமும் பாதிக்கப்படும். எனவே, இந்திக்கு பதிலாக, உள்ளூர் மொழிகளை பாதுகாத்து வளர்ப்பதில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story