பெங்களூருவில் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை - போலீஸ் கமிஷனர் உத்தரவு


பெங்களூருவில் 4 நாட்கள் மதுக்கடைகள் திறக்க தடை - போலீஸ் கமிஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 11 April 2022 5:04 AM IST (Updated: 11 April 2022 5:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இன்று முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் திறக்க தடை விதித்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளதையடுத்து, முக்கிய பகுதிகளில் 4 நாட்கள் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;-

“பெங்களூரு அல்சூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் பல்லக்கு உற்சவத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏப்ரல் 11-ந் தேதி (இன்று), 12-ந் தேதி (நாளை) அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இதுபோல முத்தியாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி கமர்சியல் தெரு, புலிகேசிநகர், சிவாஜிநகர், டி.ஜே.ஹள்ளி ஆகிய போலீஸ் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13, 14-ந் தேதிகளில் மதுக்கடைகளை திறக்கவும், மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story