யூ.ஜி.சி. நெட் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிப்பு
யூ.ஜி.சி. நெட் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நெட் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் மமிடலா ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தேர்வு தேதிகளை தேசிய தேர்வு முகமை இறுதி செய்த பின்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story