அதிக ஓவியங்கள் வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இரண்டரை வயது குழந்தை..!
ஒடிசாவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை, அதிக ஓவியங்கள் வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை, 'அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை' என்ற உலக சாதனையை படைத்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை அன்வி விஷேஷ் அகர்வால். 9 மாத குழந்தையாக இருந்தபோதே வரையத் தொடங்கியுள்ளார். இதுவரை 72 ஓவியங்கள் வரைந்து 'அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை' என்ற உலக சாதனை படைத்துள்ளார். மேலும் லண்டன் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம்பெற்றுள்ளார்.
இது தவிர அன்வி, 1 வயது ஒன்பது மாத குழந்தையாக இருந்த போது, அந்நிய மொழியான ஸ்பானிஷ் மொழியின் 42 ஒலிப்பு ஒலிகளை பேசி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story