அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்
கொரோனா பரவலுக்கு பிறகு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்,
தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் வருகை தருவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. இந்த நிலையில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
அமர்நாத் ஆலய இணைய தளம் மற்றும் மொபைல் செயலி மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அமர்நாத் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அமர்நாத்திற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ரம்பன் மாவட்டத்தில் மூவாயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் யாத்ரி நிவாஸ் அமைக்கப்பட்டுள்ளதாக அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதிஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story