இந்துத்துவா வகுப்புவாத பரவலை எதிர்கொள்வது பெரிய சவாலாக உள்ளது; சீதாராம் யெச்சூரி


இந்துத்துவா வகுப்புவாத பரவலை எதிர்கொள்வது பெரிய சவாலாக உள்ளது; சீதாராம் யெச்சூரி
x
தினத்தந்தி 11 April 2022 7:51 PM IST (Updated: 11 April 2022 7:51 PM IST)
t-max-icont-min-icon

இந்துத்துவா வகுப்புவாத பரவலை எதிர்கொள்வது பெரிய சவாலாகவே உள்ளது என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்து உள்ளார்.



கண்ணூர்,


கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி (வயது 69) நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  மத்திய கமிட்டியின் புதிய உறுப்பினர்களாக தமிழ்நாட்டை சேர்ந்த பெ. சண்முகம், கருமலையான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.  கடந்த 2015ம் ஆண்டில் இருந்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு யெச்சூரி இன்று பேசும்போது, இந்துத்துவா வகுப்புவாதத்திற்கான ஒவ்வொரு முயற்சியையும், ஒவ்வொரு மட்டத்திலும் எதிர்கொள்ள வேண்டும்.  அதுவும், அரசியல் ரீதியாகவும், கருத்தியல் சார்ந்தும், சமூக, கலாசார அடிப்படையிலும் மற்றும் அமைப்பு ரீதியாகவும் என்று அவர் கூறியுள்ளார்.

வகுப்புவாதத்தினை பரவ செய்வதற்காக, கிடைக்க கூடிய அனைத்து சமூக வழிமுறைகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள், இது ஒவ்வொரு மட்டத்திலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

இது மார்க்சிஸ்டு கட்சிக்கு ஒரு பெரிய சவாலாகவே உள்ளது.  அதுவும் இந்தி பேசும் மாநிலங்களில் என்று கூறியுள்ளார்.

வடமாநிலங்களுடன், வடகிழக்கு பகுதிகளும் விரைவாக மற்றும் ஆபத்துக்குரிய வகையில் வகுப்புவாதத்திற்கு ஆட்பட்டு உள்ளது.  இதற்காக அவர்கள் தற்போது அசாமை பயன்படுத்தி வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை தாக்கி பேசிய யெச்சூரி, பிரதமரின் இன்றைய கவலை ஒன்று ஹிஜாப் அல்லது ஹலால் அல்லது ஆஜான் ஆக இருக்கும்.  இந்த விவகாரங்களே அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

நாட்டில் வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு இன்மை, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது, அதிகரித்து வரும் வறுமை அல்லது தினசரி பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு ஆகிய இவையெல்லாம் அவர்களுக்கு முக்கிய விசயமில்லை என்றும் கூறியுள்ளார்.


Next Story