வன்முறையை சகிக்க முடியாது என பிரதமர் பேசுவதற்காக நாடே காத்திருக்கிறது; காங்கிரஸ் கட்சி


வன்முறையை சகிக்க முடியாது என பிரதமர் பேசுவதற்காக நாடே காத்திருக்கிறது; காங்கிரஸ் கட்சி
x
தினத்தந்தி 11 April 2022 10:29 PM IST (Updated: 11 April 2022 10:29 PM IST)
t-max-icont-min-icon

வன்முறையை எந்த சூழலிலும் சகிக்க முடியாது என பிரதமர் எப்போது பேசுவார் என்று நாடே காத்து கொண்டிருக்கிறது என காங்கிரஸ் முதல்-மந்திரி பேசியுள்ளார்.




ஜெய்ப்பூர்,



ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்-மந்திரியான அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் இன்று பேசும்போது, ராமநவமி நாளில் சில மாநிலங்களில் வன்முறை வெடித்தது.  ராமர் பிறந்த நாளில் வன்முறை ஏற்பட்டு உள்ளது.

நாடு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என நீங்கள் சிந்தித்து பாருங்கள்.  வன்முறையை தூண்டுவோர் தப்ப முடியாது என நாட்டு மக்களுக்கு பிரதமர் கூற வேண்டும்.

வன்முறையை எந்த சூழலிலும் சகித்து கொள்ள முடியாது என பிரதமர் மோடி எப்போது பேசுவார் என்று நாடே காத்து கொண்டிருக்கிறது.  அதுபோன்றதொரு அறிக்கை எதுவும் வெளியிடப்படாத நிலையில், வன்முறை பல இடங்களில் பரவி வருகிறது என கெலாட் பேசியுள்ளார்.

இந்திய விடுதலைக்காக நமது தலைவர்கள் செய்த தியாகங்களை மக்கள் மறக்க செய்யும் முயற்சிகள், சதி திட்டமொன்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நாட்டில் இதுபோன்ற சூழல் உருவாக்கப்படுவது முறையானதல்ல.

ஒவ்வொருவரிடத்திலும் அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் இருக்க வேண்டியது அவசியம்.  அப்போதுதான் நாடு முன்னேற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.




Next Story