உத்தர பிரதேச சட்டமன்ற மேலவை தேர்தல்: பாஜக அமோக வெற்றி


உத்தர பிரதேச சட்டமன்ற மேலவை தேர்தல்: பாஜக அமோக வெற்றி
x
தினத்தந்தி 12 April 2022 4:43 PM IST (Updated: 12 April 2022 4:43 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேச சட்டமன்ற மேலவையில் காலியாக இருந்த 36 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

லக்னோ,

உத்தர பிரதேச சட்டமன்ற மேலவை தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.  மொத்தம் உள்ள 100 இடங்களில் காலியாக இருந்த 36 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி உடைய எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்தனர்.

வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், 36 இடங்களில் 33 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், வாரணாசி தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

Next Story