17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை விலை பணவீக்கம் அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த மார்ச் மாத சில்லறை விலை பண வீக்கம் 6.07 சதவிகிதத்தில் இருந்து 6.95- ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த மார்ச் மாத சில்லறை விலை பண வீக்கம் 6.07 சதவிகிதத்தில் இருந்து 6.95- ஆக உயர்ந்துள்ளது. கடந்த 17 மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். எண்ணெய் விலை மற்றும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததே பண வீக்கம் உயர்வுக்கு காரணம் என்று தெரிகிறது.

மார்ச் மாதத்தில் உணவு பொருட்களின் பண வீக்கம் 7.68 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 5.85 சதவிகிதமாக சில்லரை விலை பணவீக்கம் இருந்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோப்ர் மாதம் சில்லரை விலை பண வீக்கம் 7.61- சதவிகிதமாக உயர்ந்தது. நுகர்வோர் விலை குறியீடு பட்டியலை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும் சில்லரை விலை பண வீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதத்தை தொடர்ந்து 3 வது மாதத்தை தாண்டியுள்ளது.

சில்லறை பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை வைத்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story