2-வது ‘டோஸ்’ போட்டு 6 மாதங்களில் ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி மத்திய அரசிடம் உற்பத்தி நிறுவனம் கோரிக்கை


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 12 April 2022 11:23 PM IST (Updated: 13 April 2022 6:07 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசிடம் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான புனே இந்திய சீரம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 9 மாதங்கள் முடிந்த நிலையில், முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த 9 மாதங்கள் இடைவெளியை, 6 மாதங்களாக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான புனே இந்திய சீரம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. உரு மாறிய கொரோனா வைரஸ்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க, இது அவசியம் என்று இந்திய சீரம் நிறுவனம் கருதுகிறது.

Next Story