பதவி விலக போவது இல்லை: கர்நாடக மந்திரி ஈஸ்வரப்பா திட்டவட்டம்


பதவி விலக போவது இல்லை:  கர்நாடக மந்திரி ஈஸ்வரப்பா திட்டவட்டம்
x
தினத்தந்தி 13 April 2022 3:38 PM IST (Updated: 13 April 2022 3:38 PM IST)
t-max-icont-min-icon

அரசு காண்டிராக்டர் தற்கொலைக்கு தூண்டியதாக மந்திரி ஈஸ்வரப்பா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் இண்டல்கா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் கே.பட்டீல். இவர் காண்டிராக்டர் ஆவார். மேலும் இவர் பா.ஜனதா பிரமுகராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட அரசு வளர்ச்சிப் பணிகளை டெண்டர் எடுத்து செய்து வந்தார்.

இந்த நிலையில், கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை மந்திரி தனக்கு 40  சதவீதம் கமிஷன் தொகை கோருவதாக  பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்த சந்தோஷ் கே. பட்டீல் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு ஈஸ்வரப்பாவே காரணம் என சந்தோஷ் பட்டீல் கடிதம் எழுதி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவம் குறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மந்திரி ஈஸ்வரப்பா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தன் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தாலும் எக்காரணம் கொண்டும் பதவி விலக மாட்டேன் என்று ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார். 

Next Story