’மத வழிபாட்டு தளத்தில் ஒலிப்பெருக்கியை நீக்கவில்லையெனில்...’ - தேதி குறிப்பிட்டு ராஜ் தாக்கரே எச்சரிக்கை


’மத வழிபாட்டு தளத்தில் ஒலிப்பெருக்கியை நீக்கவில்லையெனில்...’ - தேதி குறிப்பிட்டு ராஜ் தாக்கரே எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 April 2022 3:54 PM IST (Updated: 13 April 2022 3:54 PM IST)
t-max-icont-min-icon

மத வழிபாட்டு தளத்தில் பொருத்தப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை நீக்க வேண்டும் என நவநிர்மாண் சேனா தலைவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் நேற்று நவநிர்மாண் சேனா கட்சியின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்தாக்கரே, இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான மசூதியில் இருந்து கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை சிவசேனா தலைமையிலான மாநில அரசு மே 3-ம் தேதிக்குள் நீக்கவில்லையெனில் நாங்கள் (நவநிர்மாண் சேனா) மசூதி (இஸ்லாமிய மத வழிபாட்டு தளம்) முன் அனுமன் (இந்து மதக்கடவுள்) பாடலை ஒலிப்பெருக்கி மூலம் ஒலிப்போம். 

இது சமூக பிரச்சினையே தவிர மத ரீதியிலான பிரச்சினை அல்ல. நான் மாநில அரசுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. உங்களால் (மராட்டிய அரசு) என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள்’ என்றார்.

அதேபோல், நாடு முழுவதும் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என பிரதமருக்கு ராஜ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story