கர்நாடகத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் இன்று 10 ஆயிரத்து 423 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெங்களூருவில் 46 பேர் உள்ளனர். ஒரே நாளில் 62 பேர் குணம் அடைந்தனர்.
1,438 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு புறநகர், சித்ரதுர்கா, தட்சிண கன்னடாவில் தலா ஒருவரும், மைசூருவில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story