6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் மாநாடு 30-ந் தேதி நடக்கிறது


6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு முதல்-மந்திரிகள், தலைமை நீதிபதிகள் மாநாடு 30-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 13 April 2022 10:44 PM IST (Updated: 13 April 2022 10:44 PM IST)
t-max-icont-min-icon

மாநில முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மாநாடு, வருகிற 30-ந் தேதி நடக்கிறது.

புதுடெல்லி, 

மாநில முதல்-மந்திரிகள் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மாநாடு, வருகிற 30-ந் தேதி நடக்கிறது. முந்தைய மாநாடு, 2016-ம் ஆண்டு நடந்த நிலையில், 6 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இம்மாநாடு நடக்கிறது. பிரதமர் ேமாடி, மாநாட்டை தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. நீதித்துறை சந்திக்கும் சவால்கள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.

மாநாட்டின் செயல் திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், விரைவாக நீதி வழங்குதல், கோர்ட்டுகளில் காலியிடங்களை நிரப்புதல், நிலுவை வழக்குகளை குறைத்தல், நீதித்துறை கட்டமைப்புகளை அதிகரித்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. பல்வேறு அமர்வுகளாக முதல்-மந்திரிகளும், தலைமை நீதிபதிகளும் ஆலோசித்து கருத்தொற்றுமை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story