ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து: மீட்பு படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'ரோப் கார்'கள் விபத்தில், மீட்பு பணியில் ஈடுபட்ட படையினருக்கு பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்டில், திரிகூட் மலைப்பகுதியில், தனியார் நிறுவன 12 ரோப் கார்களில் 60க்கும் மேற்பட்ட பயணியர் சென்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, நடுவழியில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதில், ஒருவர் பலியானார்.
தகவல் அறிந்த விமானப் படையினர், இந்தோ - திபெத் எல்லை போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு படையினர், ரோப் கார்களில் சிக்கியோரை மீட்கும் பணிகளை தொடங்கினர். மீட்பு பணியின்போது, ஹெலிகாப்டரில் இருந்து விழுந்து ஒருவர் பலியானார். இரவில் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டபோது, 15 பேர் ரோப் கார்களில் சிக்கி இருந்தனர்.
அவர்களை மீட்கும் பணியின் போது, ஷோபா தேவி, 60, என்பவர், ஹெலிகாப்டரில் இருந்து தவறி விழுந்து பலியானார். ரோப் கார் விபத்தில், பலி எண்ணிக்கையை மூன்றாக உயர்த்தியது. மீதமுள்ள 14 பேர், 40 மணி நேரத்திற்குப் பின், பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், மீட்புபணியில் துரிதமாக ஈடுப்பட்ட வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியது,
ஒவ்வொரு நெருக்கடியிலிருந்தும் மக்களை மீட்டெடுப்பதில் உங்களின் வலிமையை நினைத்து இந்த தேசம் பெருமிதம் கொள்கிறது. திரிகூட் விபத்திலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம். உங்கள் அனுபவம் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களை பாராட்டும் அதே நேரம் சில உயிர்கள் பலியானது வருத்தம் அளிக்கிறது என்றார்.
Related Tags :
Next Story