"இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவுக்கு வரும்" - ப.சிதம்பரம் எச்சரிக்கை
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடிய அபாயம் இருப்பதாக ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
சென்னை,
தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் வரும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். 'தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்.
வந்துவிட்டது என்று கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்' என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story