பிரதமர்கள் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி- முதல் டிக்கெட்டையும் எடுத்தார்
14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், அவர்களின் சாதனைகள் உள்பட அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இந்திய பிரதமர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அருங்காட்சியகம் திறக்க, மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து தீன் மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் ரூ.271 கோடி செலவில் 10,975.36 ச. மீ., பரப்பளவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், அவர்களின் சாதனைகள் உள்பட அனைத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் துவங்கி நிறைவடைந்ததையடுத்து பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக முதல் டிக்கெட்டையும் பிரதமர் மோடி எடுத்தார்.
Related Tags :
Next Story