திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 88 ஆயிரத்து 748 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் வருமானமாக 4 கோடியே 82 லட்சம் ரூபாய் கிடைக்கப்பெற்றதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் இன்றி இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story