டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக வேகமாக அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. திங்கள் கிழமை 137 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலயில் இன்று தொற்று பாதிப்பு 325 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 0.5 சதவிகிதத்தில் இருந்து 2.39- சதவிகிதமாக ஒரே வாரத்தில் உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு வேகமாக உயர்ந்தாலும் ஆறுதல் தரும் வகையில் உயிரிழப்பு எதுவும் இல்லை.
கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்களின் எண்ணிக்கை விகிதம் மிகக்குறைவாகவே உள்ளது இதனால், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் டெல்லி சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருவதால் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் 20 ஆம் தேதி கூட உள்ளது. கொரோனா பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது.
Related Tags :
Next Story