பஞ்சாப் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை


பஞ்சாப் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
x
தினத்தந்தி 14 April 2022 10:43 PM IST (Updated: 14 April 2022 10:43 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம் தொடர்பாக, காங்கிரசை சேர்ந்த பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

புதுடெல்லி,

பஞ்சாபில், முதல்-மந்திரி  பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், காங்.,கை சேர்ந்த அப்போதைய முதல்-மந்திரி சரண்ஜித் சிங்கின் உறவினர் பூபிந்தர் சிங் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது 10 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 

விசாரணையில், சட்டவிரோத மணல் குவாரி நடத்துபவர்கள் லஞ்சமாக கொடுத்த பணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் நேரில் ஆஜராக, அவருக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' அனுப்பியது. இதையடுத்து, ஜலந்தரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் சரண்ஜித் சிங் மாலை ஆஜரானார்.அவரிடம் அதிகாரிகள்ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். இது குறித்து சரண்ஜித் சிங் கூறுகையில், ''அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு தெரிந்தவரை பதில் அளித்தேன். மீண்டும் ஆஜராவது குறித்து எதுவும் கூறப்படவில்லை,'' என்றார். 

பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவஜோத் சிங் சித்து கூறுகையில், ''என்னுடைய போராட்டம் பஞ்சாபிற்காக தானே தவிர மணலுக்காக அல்ல.''நிலம், மண், மது மாபியா நடத்தியவர்கள்கஜானாவை காலி செய்து சுயநலத்திற்காக பஞ்சாபை வீழ்த்தினர். அவர்களுடனான சண்டை தொடரும்,'' என்றார்.

Next Story