சாக்லேட் வாங்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேச சிறுவன் கைது.!
சாக்லேட் வாங்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேச சிறுவன் கைதுசெய்யப்பட்டான்.
அகர்தலா,
சாக்லேட் வாங்குவதற்காக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததற்காக வங்கதேச சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச எல்லையைக் குறிக்கும் ஷால்டா நதிக்கு அருகில் உள்ள வங்காளதேச கிராமத்தில் வசிக்கும் எமன் ஹொசைன் என்ற அந்த சிறுவன், திரிபுராவின் சிபாஹிஜாலா மாவட்டத்தில் தனக்குப் பிடித்த இந்திய சாக்லேட்டை வாங்குவதற்காக ஆற்றை கடந்து வந்துள்ளான். அவனிடம் விசாரித்ததில், தான் சாக்லேட் வாங்குவதற்காக இந்தியாவிற்குள் வந்ததாக கூறினான். அவனிடம் நூறு வங்காளதேச ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தன.
இந்தியாவில் உள்ள கலம்சௌரா கிராமத்தில் உள்ள ஒரு கடையில் சாக்லேட் வாங்க முள்வேலியில் உள்ள துளை வழியாக பதுங்கிச் சென்று அதே வழியில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், இந்தமுறை படிபட்டான். சிறுவனின் குடும்பத்தினர் யாரும் இதுவரை இந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவில்லை.
வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி மளிகைப் பொருட்களை வாங்கவும், சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகவும், இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைவார்கள். பொதுவாக எல்லை பாதுகாப்புப்படையினர் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் புறக்கணித்து, சந்தேக நபர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த சிறுவன் சாக்லேட் வாங்க மட்டுமே வந்திருப்பதாக குடியிருப்புவாசி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story