"மக்கள் கவலை போக்க மாவட்டம்தோறும் மருத்துவ கல்லூரி" - பிரதமர் மோடி
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பூஜ்,
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் வறுமையில் இருந்து வெளிவர கடுமையாக உழைக்கிறார்கள் என்றும் ஆனால், மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவு குறித்த கவலை மக்களிடையே அதிகம் உள்ளது என்றும் கூறினார்.
மருத்துவ செலவில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வகையில் அனைத்து கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். மேலும் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story