டெல்லியில் 5 ஆண்டுகளில் தீ விபத்தில் 1860 போ் பலி


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 April 2022 2:52 AM IST (Updated: 16 April 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 591 பேர் தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி தீயணைப்புத் துறை, தலைநகரில் நடந்த தீ விபத்துகள் தொடர்பான ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது. அதில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த தீ விபத்துகளில் 1860 போ் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து கடந்த மார்ச் 31 உடன் முடிவடைந்த 5 ஆண்டுகளில் டெல்லியில் நடந்த பல்வேறு தீ விபத்துகளில் 1860 பேர் உயிரிழந்து இருக்கிறாா்கள். 7 ஆயிரத்து 558 போ் காயம் அடைந்து இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக கடந்த 2021-22-ம் ஆண்டில் மட்டும் 591 பேர் தீ விபத்துக்கு இரையானார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story