நடுரோட்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை செருப்பால் அடித்த இளம்பெண்!


நடுரோட்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை செருப்பால் அடித்த இளம்பெண்!
x
தினத்தந்தி 16 April 2022 9:56 PM IST (Updated: 16 April 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

அந்த பெண்ணை தடுக்க முயன்றதற்கு “அடிபட்டது எனக்கு உங்களுக்கு அல்ல” எனக் கூறி மீண்டும் அவரை அடித்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை நடுரோட்டில் வைத்து இளம்பெண் ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் நடந்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமையன்று மாலை பீஸ்ஸா டெலிவரி செய்வதற்காக ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் சாலையின் இடதுபக்கமாக பயணிக்காமல், மாறாக வலதுபக்க சாலையில் சென்றுள்ளார். 

இதனை சற்றும் எதிர்பார்க்காததால், தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் அந்த ஊழியர் மீது மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அதில் நல்ல வேளையாக பெரிதாக காயம் ஏதும் ஏற்படவில்லை. கோபமடைந்த பெண், தனது காலில் மாட்டியிருந்த ஷூவை கழற்றி அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அருகிலிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுக்க முயன்றதற்கு “அடிபட்டது எனக்கு உங்களுக்கு அல்ல” எனக் கூறி மீண்டும் அவரை அடித்துள்ளார்.

பின் அங்கிருந்து சென்றுவிட்டார். சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்த போலீசார்,  நடுரோட்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை செருப்பால் அடித்த இளம்பெண்ணின் மீதும், வாலிபர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த பெண் பயணித்த ஸ்கூட்டர் நம்பரை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

நடுரோட்டில் உணவு டெலிவரி செய்யும் ஊழியரை செருப்பால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Next Story