இந்தியாவில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்று முன்தின பாதிப்பான 975 மற்றும் நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 150-ஐ விட அதிகமாகும். வெகுநாட்களுக்கு பின் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் மொத்த பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 44 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 954 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த மேலும் 214 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இதில், 213 உயிரிழப்புகள் கேரளாவில் பதிவாகியுள்ளது. கேரளாவில் ஏற்கனவே உயிரிழந்து மாநில கணக்கில் சேர்க்கப்படாத உயிரிழப்புகள் நேற்று மறுகணக்கீட்டின் மூலம் சேர்க்கப்பட்டதால் இந்த அதிக உயிரிழப்பு எண்ணிக்கைக்கு காரணமாகும்.
இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 186 கோடியே 54 லட்சத்து 94 ஆயிரத்து 355 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story