ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி - திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது சோகம்


ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி - திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது சோகம்
x
தினத்தந்தி 18 April 2022 12:58 PM IST (Updated: 18 April 2022 12:58 PM IST)
t-max-icont-min-icon

திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் பயணித்த ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ரேபரேலி பகுதியில் உள்ள நசிராபாத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஜீப்பில் நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.   

நள்ளிரவு 12 மணியளவில் அமேதியின் கவுரிகஞ்ச் என்ற பகுதியில் பயணித்தபோது சாலையின் மறுபுறம் வேகமாக வந்த லாரி ஜீப் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணித்த குழந்தை உள்பட 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களையும் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story