மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,239 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 1,239 புள்ளிகள் சரிவடைந்தது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு அதிரடியாக 900 புள்ளிகள் சரிவடைந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதியம் 12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் குறியீடு 1,238.98 புள்ளிகள் (2.12 சதவீதம்) சரிவடைந்து 57,099.95 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக தொடக்கத்தில் 57,338.58 புள்ளிகளாக சரிவு கண்டிருந்த நிலையில், தொடர்ந்து, வீழ்ச்சி கண்டு 57,047.00 புள்ளிகளாக இருந்தது.
இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 328.55 புள்ளிகள் (1.88 சதவீதம்) சரிவடைந்து 17,147.10 புள்ளிகளாக இருந்தது. இதற்கு முன்பு, கடைசி வர்த்தக நாளான கடந்த புதன்கிழமை நிப்டி குறியீடு 17,475.65 புள்ளிகளாக இருந்தது
ஐ.டி. பங்குகள் கடும் நெருக்கடியை சந்தித்தன. அவற்றில், இன்போசிஸ் 7.31 சதவீதமும், டெக் மகிந்திரா 5.29 சதவீதமும், விப்ரோ 3.74 சதவீதமும், டி.சி.எஸ். 3.23 சதவீதமும் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜீஸ் 2.93 சதவீதமும் சரிவடைந்து காணப்பட்டது.
Related Tags :
Next Story