2021-22 நிதியாண்டில் 1.67 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன - கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தகவல்


2021-22 நிதியாண்டில் 1.67 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன - கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 18 April 2022 6:59 PM IST (Updated: 18 April 2022 6:59 PM IST)
t-max-icont-min-icon

ஒரு நிதியாண்டில் அதிக நிறுவனங்கள் பதிவு செய்வது இதுவே இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

புதுடெல்லி,

நாட்டில் 2021-22 நிதியாண்டில், 1.67 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என்று மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நிதியாண்டில் அதிக நிறுவனங்கள் பதிவு செய்வது இதுவே இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்

கடந்த 2020-21 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட 1.55 லட்சம் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய ​​2021-22 நிதியாண்டில் 1.67 லட்சத்துக்கும் அதிகமான நிறுவனங்களை கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) 
பதிவு செய்துள்ளது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இப்போது பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டை விட, 2021-22 நிதியாண்டில்  பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 8% அதிகமாகும். 

2018-19 நிதியாண்டில் 1.24 லட்சம் நிறுவனங்களும், 2019-20ல் 1.22 லட்சம் நிறுவனங்களும் பதிவு செய்துள்ளதாக மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வணிக நடைமுறைகளை எளிதாக்கும் மத்திய அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக, மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது நாட்டில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள், நேரம் மற்றும் செலவுகளை மிச்சப்படுத்துகிறது.

இந்த நிதியாண்டில், 31,107 நிறுவனங்களுடன் அதிக பதிவு செய்யப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது.

பிராந்திய வாரியாக, வணிகச் சேவைகள் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ளன (44,168). 

அதைத் தொடர்ந்து உற்பத்தி துறையில் 34,640 நிறுவனங்கள், தனிநபர் மற்றும் சமூக சேவைகள் பிரிவில் 23,416 நிறுவனங்கள் மற்றும் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் 13,387 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Next Story