அரியானா: வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!
அரியானா மாநிலம் குருகிராமில் வேன் மோதியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியானா,
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பேகம்பூர் கடோலா பகுதியில் 4 வயது சிறுமியான அனாமிகா, அருகில் உள்ள தண்ணீர் குழாயில் சிறு பாட்டில்களில் தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்தவழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுமியின் மீது மோதியது. இதனால், வேனின் சக்கரத்தில் சிக்கிய சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் வேன் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரிக்கையில், சிறுமியை தான் கவனிக்கவில்லை என்றும், எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நடந்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து வேன் ஓட்டுநர் ஜாமினில் வெளியில் வந்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story