உ.பி. 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று


உ.பி.  33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 19 April 2022 4:25 PM IST (Updated: 19 April 2022 4:44 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசம் மாநிலம் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் 33 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 4வது அலை வந்து விட்டதா?  என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் மாவட்டத்தில்  107 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அதில் 33 குழந்தைளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அடைந்த குழந்தைகள் நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இது குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம், ஆனால் கொரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று புத் நகர் மாவட்ட கலெக்டர் வலியுறுத்தினார்.

Next Story