டெல்லியில் மேலும் 632- பேருக்கு கொரோனா - தொற்று பாதிப்பு விகிதம் சற்று குறைந்தது
டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 632- ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் எகிறத்தொடங்கியுள்ளது. கடந்த ஓருவாரமாகவே தொற்று பாதிப்பு கிடு கிடு வென உயர்ந்து மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
எனினும், கொரோனா பாதிப்பு உயர்ந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை அச்சப்படும் அளவு இல்லை எனக்கூறிய டெல்லி அரசு மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டது.
தொற்று பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் சில கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 632- ஆக பதிவாகியுள்ளது. தொற்று பாதிப்பு 7.72 சதவீதத்தில் இருந்து 4.42 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இன்று தொற்று பாதிப்பு விகிதம் குறைந்தாலும் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்தே வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும், பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறிகளே இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story